twitter
    மாணவர்கள்:)

மாநில அறிவியல் திறன் போட்டி: .


: மாநில அளவிலான அறிவியல் திறன் போட்டியில் வெற்றி பெறும் மாணவருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ஒரு ஆண்டுக்கு வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில் மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சியகம் 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் திறன் போட்டிகளை நடத்தவுள்ளது. இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலிருந்தும் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். "உலக அறிவியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது' என்ற தலைப்பில் 6 நிமிடம் பேச வேண்டும். இந்தியாவில் உள்ள எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசலாம். இதில் அறிவியல் கருத்து, மனப்பாடம், பேச்சின் வன்மை, படைப்பாற்றல் ஆகியவைகளுக்கு தனித்தனியே மதிப்பெண்கள் வழங்கப்படும். ஒவ்வொரு வருவாய் மாவட்டங்களில் இருந்தும் முதல் மூன்று பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்கு ஆக.,25ல் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுவோருக்கு ஒரு ஆண்டு வரை மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் பங்கு பெறும் அனைத்து மாணவர்களுக்கும் அறிவியல் சார்ந்த புத்தகங்கள், "சிடி'க்கள் வழங்கப்படும்.